< Back
சினிமா செய்திகள்
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
சினிமா செய்திகள்

சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

தினத்தந்தி
|
24 Nov 2022 10:31 PM IST

நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிம்பு, 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்