< Back
சினிமா செய்திகள்
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட்..!
சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் அப்டேட்..!

தினத்தந்தி
|
22 Jun 2022 10:08 PM IST

நடிகர் சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. 'முஃப்தி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக 'பத்து தல' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷியபுத்திரன், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் மே மாதம் சிம்பு கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. சிம்பு தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு தொடர்பான காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டும் என்றும் சுமார் 45 நாட்கள் நடக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை ஒட்டி படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்