< Back
சினிமா செய்திகள்
தக் லைப் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!
சினிமா செய்திகள்

'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!

தினத்தந்தி
|
27 July 2024 2:49 PM IST

நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஜெய்சால்மர் மற்றும் புதுடெல்லி போன்ற இடங்களில் நடைபெற்றது. 'தக் லைப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

முன்னதாக, ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில், ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டு மீதமுள்ள காட்சிகளை நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, 'தக் லைப்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இன்ஸ்டாவில் புகைப்படத்தினை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பும் டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்