< Back
சினிமா செய்திகள்
சைமா விருதுகள் 2024: 5 விருதுகளை அள்ளிய ஜெயிலர் திரைப்படம்
சினிமா செய்திகள்

சைமா விருதுகள் 2024: 5 விருதுகளை அள்ளிய 'ஜெயிலர்' திரைப்படம்

தினத்தந்தி
|
16 Sept 2024 6:48 PM IST

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் 5 சைமா விருதுகளை பெற்றுள்ளது.

துபாய்,

சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த 2024-ம் ஆண்டுக்கான சைமா விருது விழா துபாயில் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 2023-ல் வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த படம் - சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து நெல்சன் திலிப்குமார் இயக்கி வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படம் சிறந்த படத்துக்கான சைமா விருதை வென்றது.

சிறந்த காமெடி நடிகர் - ஜெயிலர் படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவ்விருதை அவருக்கு வழங்கினார்.

சிறந்த இயக்குனர் - சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் நெல்சன் தட்டிச் சென்றார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஜெயிலர் படத்தை இயக்கியதற்காக நெல்சனுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகர்- நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வஸந்த் ரவிக்கு சிறந்த துணை நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த பாடலாசிரியர்: ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலை எழுதியதற்காக நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருது வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்