< Back
சினிமா செய்திகள்
சைமா விருதுகள் 2024 : விருது வென்ற பிரபலங்கள்
சினிமா செய்திகள்

சைமா விருதுகள் 2024 : விருது வென்ற பிரபலங்கள்

தினத்தந்தி
|
16 Sept 2024 7:34 PM IST

நடிகர் விக்ரம், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் சைமா விருதுகளை வென்றனர்.

துபாய்,

சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு சைமா விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி துபாயில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த படம் - நெல்சன் திலிப்குமார் (ஜெயிலர்)

சிறந்த நடிகர் - விக்ரம் (பொன்னியின் செல்வன் 2)

சிறந்த நடிகை - நயன்தாரா (அன்னப்பூரணி)

சிறந்த நடிகர் க்ரிட்டிக் சாய்ஸ் - சிவகார்த்திகேயன் (மாவீரன்)

சிறந்த நடிகை கிரிட்டிக் சாய்ஸ் - ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன் 2)

சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் {லியோ}

சிறந்த இயக்குனர் க்ரிட்டிக் சாய்ஸ் - அருண் குமார் {சித்தா)

சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன் {ரத்தமாரே}

மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் - கவின்(தாதா)

அசாதாரண நடிகர் - எஸ்.ஜே. சூர்யா

சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு

சிறந்த துணை நடிகை - சரிதா ஈஸ்வரி (மாவீரன்)

சிறந்த அறிமுகம் - ஹிருது ஹாரூன்

சிறந்த துணை நடிகர் - வசந்த் ரவி (ஜெயிலர்)

சிறந்த அறிமுக இயக்குனர் - விக்னேஷ் ராஜா (போர் தோழில்)

சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி (அயோத்தி)

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - ஷான் ரோல்டன்(நான் காலி பாடல்- குட் நைட்)

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தயாரிப்பாளர் - திட்டக்குடி கண்ணன் ரவி (ராவண கோட்டம்)

சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனீஸ்வர் (மாமன்னன்)

மேலும் செய்திகள்