< Back
சினிமா செய்திகள்
நிச்சயதார்த்தம் முடிந்தது - உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ்
சினிமா செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்தது - உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ்

தினத்தந்தி
|
28 March 2024 11:40 AM GMT

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

சென்னை,

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, சித்தார்த்தும் அதிதி ராவும் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் நேற்று (மார்ச் 27) திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் "அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது" என்று பதிவிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்