< Back
சினிமா செய்திகள்
சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
சினிமா செய்திகள்

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

தினத்தந்தி
|
15 July 2024 6:42 PM IST

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு சித்தா திரைப்படம் வெளியானது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் கடந்த ஜூலை 12-ம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சித்தார்த். அதேசமயம் மிஸ் யூ என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சித்தார்த், எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

சித்தார்த்தின் 40 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார் , தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்