சுருதிஹாசனுடனான பிரிவு குறித்து காதலர் பதில்
|நடிகை சுருதிஹாசனுடனான பிரிவு குறித்து அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு தனது மெளனம் கலைத்து பேசியிருக்கிறார்.
நடிகை சுருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் சுருதிஹாசன். 'திருமணம் எப்போது?' என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் சுருதிஹாசன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சுருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
சாந்தனுவும் சுருதிஹாசனை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் நிறைய விஷயங்களை இந்தக் காலக்கட்டத்தில் தெரிந்து கொண்டதாக சொல்லி பிரிவை மறைமுகமாக உறுதி செய்தார் நடிகை சுருதிஹாசன்.
இந்நிலையில், பாலிவுட் ஊடகம் ஒன்று சாந்தனுவிடம் சுருதியுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு அவர், 'மன்னித்து விடுங்கள்! இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்' என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார்.