< Back
சினிமா செய்திகள்
ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சுருதிஹாசன்
சினிமா செய்திகள்

ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சுருதிஹாசன்

தினத்தந்தி
|
11 Sept 2022 5:00 PM IST

நடிகை சுருதிஹாசன் நடித்த “3” படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில் ரசிகர்கள் சுருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் 2012-ல் வெளியான 3 திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக நடிகை சுருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும், பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள். இதனால் உற்சாகம் அடைந்த சுருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே ஜி எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் சுருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

மேலும் செய்திகள்