வேலுநாச்சியாராக நடிக்கும் சுருதிஹாசன்..? பிரபல இயக்குனரின் புதிய திட்டம்
|சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை படமாக்க ராஜேஷ் திட்டமிட்டு உள்ளாராம்.
சென்னை,
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ஒருகட்டத்தில் அவரை வைத்தே 'தூங்காவனம்' என்ற படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் 'கடாரம் கொண்டான்', 'இறை' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை படமாக்க ராஜேஷ் திட்டமிட்டு உள்ளாராம். வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை சுருதிஹாசனை நடிக்க வைக்கவேண்டும் என்றும் ராஜேஷ் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலு நாச்சியார் கதாபாத்திரத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் சுருதிஹாசனிடம் இருப்பதாக ராஜேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக வெவ்வேறு விதமான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதால், வீரமங்கை வேலுநாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க சுருதிஹாசன் நிச்சயம் சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீரியட் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக சுருதிஹாசன் கூறியிருக்கிறார். எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் வேலுநாச்சியாராக வெளுத்து வாங்குவார் என்றே பேசப்படுகிறது.