< Back
சினிமா செய்திகள்
கர்மா குறித்து சுருதிஹாசன் கருத்து...!
சினிமா செய்திகள்

'கர்மா' குறித்து சுருதிஹாசன் கருத்து...!

தினத்தந்தி
|
21 Aug 2023 10:21 AM IST

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார்

'லாபம்' படத்துக்கு பிறகு சுருதிஹாசன் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. அதேவேளை தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்திலும், 'ஹாய் நானா' என்ற புதிய படத்திலும் சுருதிஹாசன் நடித்து கொண்டிருக்கிறார். 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சுருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றிய கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார்.

"பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, குதிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். நாம் நமது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும். அந்த விளையாட்டை மட்டும் பாருங்கள்" என்று சுருதிஹாசன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்து ரசிகர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'யாரை கர்மா தாக்கும்?' 'சுருதிஹாசன் யாரை குறிப்பிட்டு இப்படி பதிவிட்டுள்ளார்' என்று தொடர்ந்து யோசித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்