'ஸ்ரேயா சரண்' பிறந்தநாள் இன்று: அவரது நடிப்பில் வெளியாக உள்ள தமிழ் படங்கள்
|'ஸ்ரேயா சரண்' தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சென்னை,
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு பல வெற்றிப்படங்களை கொடுத்த 'ஸ்ரேயா சரண்' இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது இவரது நடிப்பில் வெளியாக உள்ள தமிழ் படங்களை பார்க்கலாம்.
1. சண்டக்காரி (Sandakkari)
இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சண்டக்காரி. இப்படத்தில், விமல் மற்றும் ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வெளியாக இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
2. நடடா (Nadada)
ருத்ரானா சிங் இயக்கத்தில் ஸ்ரேயா சரண், ஜெகபதி பாபு மற்றும் மிஷ்டி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
3. நரகாசூரன் (Naragasooran)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நரகாசூரன். இதில் அரவிந்த் சுவாமி, சுந்தீப் கிஷன் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 2017-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
4. சூர்யா 44 (Suriya 44)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், ஜோஜு ஜார்ஜ், சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் சூர்யா 44 படத்தில் ஸ்ரேயா சரண் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.