ஸ்ரத்தா கபூரிடம் அத்துமீறிய ரசிகர்கள் - அதிர்ச்சி சம்பவம்
|ஸ்ரத்தா கபூரிடம் ரசிகர்கள் அத்துமீறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
வருண் தவான், பிரபுதேவாவுடன் ஸ்ட்ரீட் டேன்சர் படத்தில் நடித்து இருந்தார். தற்போது ஸ்திரீ 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரத்தா கபூரிடம் ரசிகர்கள் அத்துமீறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற ஸ்ரத்தா கபூர் ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது அவரை காண ரசிகர்கள் கூடினார்கள்.
சில இளம் பெண்களும் நின்றிருந்தார்கள். அந்த பெண்களிடம் ஸ்ரத்தா கபூர் பேசி விட்டு நகர்ந்தபோது ரசிகர்கள் ஸ்ரத்தா கபூரை சூழ்ந்தனர். அவரிடம் கைக் குலுக்கவும் புகைப்படம் எடுக்கவும் முண்டியடித்தனர். சிலர் அத்துமீறியும் தொட்டனர்.
கூட்டத்தை பாதுகாவலர்களால் தடுக்க முடியவில்லை. ரசிகர்கள் வெறித்தனமாக ஸ்ரத்தா கபூரை நோக்கி பாய்ந்தனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் திணறினர். ஒரு வழியாக ஸ்ரத்தா கபூரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.