ராகுல் மோடியுடனான உறவை கிட்டத்தட்ட உறுதி செய்த ஷ்ரத்தா கபூர்
|ராகுல் மோடியுடனான உறவை கிட்டத்தட்ட ஷ்ரத்தா கபூர் உறுதி செய்ததாக தெரிகிறது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் முன்னதாக 'டு ஜோதி மெய்ன்' என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் எழுத்தாளர் ராகுல் மோடி. இந்நிலையில், ஷ்ரத்தா கபூரும், ராகுல் மோடியும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். வதந்திகளுக்கு மத்தியில் பகிர்ந்த அந்த பதிவு வதந்திகளுக்கு மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது.
அந்த புகைப்படத்தில், ஷ்ரத்தா கபூர் ஊதா நிற உடையணிந்து இருக்கிறார். குறிப்பாக அதில் அவர் 'ஆர்' எழுத்து பதித்த செயினை அணிந்திருந்தார். இந்த 'ஆர்', ராகுல் மோடியை குறிப்பதாக இதனை பார்த்த பலரும் தெரிவித்தனர். அதில் ஒருவர், ராகுல் மோடியுடனான உறவை வெளிப்படுத்த இவ்வாறு செய்தாரா? என்றும் அதற்கு மற்றொருவர், ஷ்ரத்தா கபூர் பகிர்ந்த 4 புகைப்படங்களிலும் அந்த 'ஆர்' தெரிகிறது, எனவே இதை அவர் வேண்டுமென்றே செய்ததாக தெரிகிறது என்றும் கூறினர். மேலும் மற்றொருவர், அவர்கள் இரண்டு வருடங்களாக காதலித்துவருவதாகவும் இந்த வருடம் இருவரும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் கூறினார்.
இந்நிலையில், இதன் மூலம் ராகுல் மோடியுடனான உறவை கிட்டத்தட்ட ஷ்ரத்தா கபூர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.