< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'கிராமங்களை இந்த உலகுக்கே காட்டியவர்' - பாரதிராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
|17 July 2024 2:50 PM IST
இயக்குனர் பாரதிராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜா, இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார்.