< Back
சினிமா செய்திகள்
விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்க வேண்டுமா.? - மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு
சினிமா செய்திகள்

'விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்க வேண்டுமா.?' - மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
29 Jan 2024 12:02 PM IST

நடிகர் மன்சூர் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று தனது கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.

சென்னை,

பிரபு நடித்த 'வேலை கிடைச்சிடிச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என்று மாற்றி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ' விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் நான் ஓடிப்போய் பதுங்கிக் கொள்ள வேண்டுமா..? அவர் தற்போது 'கோட்' (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) படத்தில் தானே நடிக்கிறார். அப்படி என்றால் ஆடு தானே. பிரியாணி போட்டுவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்.

நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார், இவர் கட்சி தொடங்குகிறார் என்பதை பற்றி எல்லாம் எங்களுக்கு பயம் இல்லை. எங்களுடைய கட்சியின் கொள்கைகள்தான் எங்களுக்கு முக்கியம்' என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்