< Back
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடிக்கும்   சலார்  படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
4 Jun 2023 9:02 PM IST

இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்