< Back
சினிமா செய்திகள்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
19 Sept 2024 11:56 AM IST

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எல்.ஐ.கே.' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்