< Back
சினிமா செய்திகள்
சூர்யாவின் புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம் ?
சினிமா செய்திகள்

சூர்யாவின் 'புறநானூறு' திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம் ?

தினத்தந்தி
|
16 Nov 2023 4:59 PM IST

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 5 தேசிய விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் வென்றது.

நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மீனாட்சி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு 'புறநானூறு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் மதுரையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தினை தயாரிக்கும் சூர்யாவின் 2டி என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வரும் 18 -ம் தேதி அன்று நடிகர்கள் தேர்வுக்கான நேர்காணலை மதுரையில் நடத்தவுள்ளது. இது சூர்யாவின் 'புறநானூறு' படத்திற்கான நடிகர்கள் தேர்வா?, என்று விரைவில் தெரிய வரும்.

மேலும் செய்திகள்