< Back
சினிமா செய்திகள்
அடுத்த மாதம் படப்பிடிப்பு... 170-வது படத்துக்கு தயாரான ரஜினி
சினிமா செய்திகள்

அடுத்த மாதம் படப்பிடிப்பு... 170-வது படத்துக்கு தயாரான ரஜினி

தினத்தந்தி
|
24 Jun 2023 10:13 AM IST

ரஜினிகாந்த் ஏற்கனவே ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். போலி என்கவுன்ட்டர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்