< Back
சினிமா செய்திகள்
ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு; ரஜினிகாந்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்குவேன் - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு; 'ரஜினிகாந்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்குவேன்' - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்

தினத்தந்தி
|
19 Oct 2023 6:41 AM IST

‘ரஜினிகாந்தை வைத்து ஆக்‌ஷன் படம் இயக்குவேன்' என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இதையடுத்து அடுத்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் தயாராகியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "லியோ படத்தில் பெரிய நடிகர்களுடன் பணியாற்றியது இனிய அனுபவம். படத்துக்கு வந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

லியோ படத்தின் டிரைலரில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை வசனத்துக்கு பலர் வருத்தம் தெரிவித்தனர். இதனால் அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

கதைக்கு தேவைப்பட்டதால் அந்த வசனத்தை வைத்தேன். குறிப்பிட்ட அந்த வசனத்திற்கு நானே பொறுப்பு. விஜய்க்கு அதில் சம்பந்தமில்ல.

லியோ படம் 20 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் விழா ரத்து செய்யப்பட்டது.

அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும், கைதி இரண்டாம் பாகம் படத்தையும் இயக்க இருக்கிறேன். ரஜினி நடிக்கும் படம் குடும்ப கதையாக இருக்காது. அது முழு ஆக்ஷன் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும்'' என்றார்.

மேலும் செய்திகள்