< Back
சினிமா செய்திகள்
விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
சினிமா செய்திகள்

விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
15 July 2023 10:44 PM IST

விஷால் நடிக்கும் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சென்னை,

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து விஷால் தற்போது 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்