< Back
சினிமா செய்திகள்
விஜய்யின் படப்பிடிப்பு டைரி... படக்குழு பகிர்ந்த வீடியோ
சினிமா செய்திகள்

விஜய்யின் படப்பிடிப்பு டைரி... படக்குழு பகிர்ந்த வீடியோ

தினத்தந்தி
|
14 Jan 2024 12:59 AM GMT

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The Greatest Of All Time) படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோவை 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படப்பிடிப்பு டைரி என்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்