< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் விபத்து:  நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்
சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்

தினத்தந்தி
|
9 Aug 2024 6:52 PM IST

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சூர்யா சென்னை திரும்பினார்.

சென்னை,

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது..உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சூர்யா சென்னை திரும்பினார் . சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது சூர்யா நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்