வீட்டு உரிமையாளரிடம் வாடகை தர சென்ற நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்...
|வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த நடிகை தேஜஸ்வினியிடம் நேரடியாகவே பாலியல் உறவுக்கான பேரம் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மராட்டியத்தின் புனே நகரில் சின்ஹாகத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்துள்ளார் அவர். வீட்டு உரிமையாளர், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.
ஒரு நாள், குடியிருப்புக்கான வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி பண்டிட் தனியாக சென்றுள்ளார். 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தின்போது, தேஜஸ்வினியின் ஒன்றிரண்டு படங்களே வெளிவந்திருந்தன.
வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் நேரடியாகவே பாலியல் உறவுக்கான பேரம் பேசியுள்ளார். இதனால், தேஜஸ்வினி சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
உடனே, மேஜையில் இருந்த தண்ணீர் நிரம்பிய கிளாசை எடுத்து அவரது முகத்தில் வீசியுள்ளார். பின்னர், இதுபோன்ற செயல்களை செய்வதற்காக நடிப்பு தொழிலுக்கு நான் வரவில்லை.
அப்படி இருந்தால், வாடகை குடியிருப்பில் நான் தங்கி இருக்கமாட்டேன். பல வீடுகளை மற்றும் பல கார்களை விலைக்கு வாங்கியிருப்பேன். ஆனால், நான் அப்படி செய்யவில்லை என கூறி விட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து தேஜஸ்வினி கூறும்போது, இதில் இரு விசயங்கள் இணைந்து உள்ளன. ஒன்று, எனது தொழிலை வைத்து அவர்கள் என்னை எடைப்போட்டு உள்ளனர். மற்றொன்று, எனது நிதி நிலைமை பலவீனமடைந்து இருந்தது. அது எனக்கு ஒரு படிப்பினையாக இருந்தது என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
நடிகை ஜோதி சண்டேகரின் மகளான நடிகை தேஜஸ்வினி 2004-ம் ஆண்டு கேதர் ஷிண்டேவின் இயக்கத்தில் வெளியான ஆகா பாய் அரேச்சா என்ற மராத்தி படத்தில் முதன்முதலாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.