< Back
சினிமா செய்திகள்
ஆபாச பட உலகில் அதிர்ச்சி...!! 26 வயதில் நடிகை சோபியா லியோன் மரணம்
சினிமா செய்திகள்

ஆபாச பட உலகில் அதிர்ச்சி...!! 26 வயதில் நடிகை சோபியா லியோன் மரணம்

தினத்தந்தி
|
10 March 2024 10:55 AM IST

நடப்பு ஆண்டில், ஆபாச படங்களில் நடித்து வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் மியாமி நகரை சேர்ந்தவர் சோபியா லியோன் (வயது 26). ஆபாச படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 1-ந்தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை எழுப்பியபோது அதில் பலனில்லை. இதனால், சோபியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவருடைய வளர்ப்பு தந்தை மைக் ரோமியா இதனை உறுதி செய்ததுடன், சோபியா லியோனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்துவதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார். எனினும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என கூறினார்.

101 மாடலிங் என்ற மாடலிங் ஏஜென்சியும் இதனை உறுதி செய்து வெளியிட்ட செய்தியில், ஓர் அழகிய ஆன்மா நம் அனைவரையும் தொட்டது. இனிமையான தேவதையே உன்னுடைய ஆன்மா இளைப்பாறட்டும். நாங்கள் உன் மீது எவ்வளவு அன்பு செலுத்தினோம் என்றும் தெரிந்து கொள். அவருடைய குடும்பத்திற்காக நிதி திரட்டும் பணி தொடங்கியுள்ளது என்று எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் 1997-ம் ஆண்டு பிறந்த சோபியா லியோன் 18 வயதில் ஆபாச படவுலகில் அறிமுகம் ஆனார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.8.28 கோடி ஆகும்.

நடப்பு ஆண்டில் ஆபாச பட உலகில் நடித்து வந்த காக்னி லின் கார்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா பீல்ட்ஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், 4-வது நபராக சோபியா லியோனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மரணம் பற்றி உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்