< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மீண்டும் தமிழில் சிவராஜ் குமார் படம்
|13 July 2023 12:22 PM IST
பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர், தனுசுடன் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்குவர உள்ளன.
அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். படத்துக்கு 'சிவண்ணா எஸ்.சி.எப்.சி01' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான பாயும் ஒளி நீ எனக்கு படத்தை இயக்கி பிரபலமான கார்த்திக் அத்வைத் டைரக்டு செய்கிறார். சுதிர் சந்திரபாதிரி தயாரிக்கிறார்.
விக்ரம் வேதா, கைதி படங்களுக்கு இசைஅமைத்துள்ள சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் திரில்லர் படமாக உருவாகிறது.