< Back
சினிமா செய்திகள்
சிவா நடித்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

சிவா நடித்துள்ள 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Feb 2023 9:44 PM IST

சிவா நடித்துள்ள 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

சிறிய இடைவேளைக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகள்