< Back
சினிமா செய்திகள்
மெட்ரோ ஷிரிஷ் நடித்துள்ள பிஸ்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

'மெட்ரோ' ஷிரிஷ் நடித்துள்ள 'பிஸ்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
1 Oct 2022 4:11 PM GMT

நடிகர் ஷிரிஷ் நடித்துள்ள 'பிஸ்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கிரைம் திரில்லர் திரைப்படமான 'மெட்ரோ' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷிரிஷ். இவர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பிஸ்தா'. ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். எம். விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சென்ட்ராயன், நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பிஸ்தா' திரைப்படம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




மேலும் செய்திகள்