வாடகைத்தாய் சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோனே
|சமீபத்தில் வெளியான நடிகை தீபிகாவின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவர் வாடகைத் தாய் மூலமாகவே குழந்தைப் பெறுகிறார் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திர ஜோடி தீபிகா- ரன்வீர் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், 'குழந்தை எப்போது?' என்ற செய்தி இவர்களையும் துரத்த ஆரம்பித்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஜோடி இத்தாலியில் கோலாகலமாகத் திருமணத்தை முடித்தது. திருமணம் முடிந்தாலும் இருவரும் பிஸியாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா. இருவரும் குழந்தையை இந்த வருடம் செப்டம்பர் மாதம் எதிர்பார்ப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். கர்ப்பத்தை அறிவித்ததில் இருந்து பொதுவெளியில் தளர்வான ஆடைகளையே அணிந்து வருகிறார் தீபிகா.
குறிப்பாக ஆனந்த் அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது கூட, வயிற்றை மறைக்கும்படியான உடைகளையே அணிந்திருந்தார். இப்படி இருக்கையில், ரோஹித் ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் 'சிங்கம் அகெய்ன்' படப்பிடிப்பில் தீபிகா கலந்து கொண்டுள்ளார். இதில் லேடி சிங்கம் சக்தி ஷெட்டியாக நடிக்கிறார் தீபிகா.
இதன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதில் தீபிகாவின் வயிற்றைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புகைப்படத்தைப் பார்த்த இன்னும் சிலர், 'தீபிகா வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெறுகிறார். இந்த உண்மையை மறைக்கிறார்' எனவும் சர்ச்சைக் கிளப்பி வருகின்றனர்.