விமான நிலையத்தில் பயந்து ஓடும் இளைஞரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை...!
|விமான நிலையத்தில் இளைஞரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மும்பை
இந்தியாவில் ஆடையின்றி புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.
ஷெர்லின் ஷோப்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கி பழகவும் செய்கிறார்.
சமீபத்தில் விமான நிலையத்தில் ஷெர்லின் ஒரு ரசிகரிடம் முரட்டுத்தனமாக ஆபாசமாக நடந்து கொண்டது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோவில் ஷெர்லின் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து ஆபாச அசைவுகளுடன் நடனமாடுகிறார்.ஆனால் அந்த இளைஞர் விலகி செல்ல முயற்சிக்கிறார் ஆனால் ஷெர்லின் விடவில்லை. இதனால் ஷெர்லினின் நடத்தை கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.
ஷெர்லின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டுவிட்டர் பயனாளர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்னும் சிலர் இந்தப் பெண் எங்கிருந்தாலும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என கூறி உள்ளார்.
இது ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என கூறி உள்ளனர். மேலும் சிலர் மும்பை காவல்துறையை டேக் செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.