< Back
சினிமா செய்திகள்
சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படம் ரிலீஸ் குறித்த அப்டேட்
சினிமா செய்திகள்

சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படம் ரிலீஸ் குறித்த அப்டேட்

தினத்தந்தி
|
25 May 2024 10:40 AM GMT

சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் ‘மனமே' படமானது ஜூன் 7-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சர்வானந்த், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடைய பிரபலமானவர். அதன் பிறகு தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சர்வானந்த் 96 படத்தின் ரீமேக்கான ஜானு, ஸ்ரீஹாரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இவர் கணம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை. அதேசமயம் நடிகர் சர்வானந்த் மனமே எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பலே மஞ்சி ரோஜு படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார். இதில் சர்வானந்த்துக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த படமானது லண்டன் ஐதராபாத், போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த படமானது வருகின்ற ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்