< Back
சினிமா செய்திகள்
சூர்யாவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்?
சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்?

தினத்தந்தி
|
20 Aug 2023 9:45 AM IST

'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி. அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடித்தார். இந்த 2 படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.

அதிதி ஷங்கர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கிவரும் புதிய படத்தில் அதர்வா தம்பி ஆகாஷூகுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் முன்னணி நடிகரான சூர்யாவுடன், அதிதி ஷங்கர் ஜோடி சேர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கி வரும் 'கங்குவா' படத்துக்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதில் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. தற்போது சூர்யா ஜோடியாக அதிதி ஷங்கர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிதி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

கார்த்தியுடன் 'விருமன்' படத்தில் நடித்த அதிதி, அவரது அண்ணன் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார். 'அம்மணி ராசிக்காரர் தான்' என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்