< Back
சினிமா செய்திகள்
ஷங்கரின் 15-வது படம்
சினிமா செய்திகள்

ஷங்கரின் 15-வது படம்

தினத்தந்தி
|
28 March 2023 8:13 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் ஷங்கர் 1993-ல் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றி பெற்று அவரை பிரபலமாக்கியது.

காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் என்று பல வெற்றிப்படங்கள் அவரது இயக்கத்தில் வந்தன. அனைத்தும் பிரமாண்ட படங்களாகவும் இருந்தன. இந்தியன்-2 ஷங்கர் இயக்கும் 14-வது படம் ஆகும்.

தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ராம்சரணை வைத்து தனது 15-வது படத்தை ஷங்கர் டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு 'கேம் சேஞ்ஜர்' என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். தெலுங்கு மொழியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதிக பொருட்செலவில் தயாராகிறது. பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

மேலும் செய்திகள்