< Back
சினிமா செய்திகள்
தைவான் செல்லும் இந்தியன் 2 படக்குழு
சினிமா செய்திகள்

தைவான் செல்லும் 'இந்தியன் 2' படக்குழு

தினத்தந்தி
|
6 Feb 2023 2:01 PM IST

‘இந்தியன் 2' படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு தைவான் செல்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக நடிக்கிறார். காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜமால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சில மாதங்களாக முடங்கி இருந்த இதன் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத், ராஜமுந்திரி சிறை, போபால் பகுதிகளில் ஏற்கனவே பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. தற்போது திருப்பதி வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் சென்று படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளிவந்தன. இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து தைவானில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் தைவான் செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்