விரைவில் தாயாக போகிறேன் - நடிகை பூர்ணா
|நடிகை பூர்ணா, தனது யூடியூப் வலைத்தளம் மூலமாக அம்மா ஆவதற்கு தயாராகி விட்டதாக கூறியுள்ளார்.
மலையாள நடிகையான பூர்ணா தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆடுபுலி, கந்தகோட்டை, தகராறு, அடங்கமறு, காப்பான், தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கொச்சியில் குடும்பத்தினருடன் வசித்த பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பானது.
பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் சானித் ஆசிப் அலியை பூர்ணா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பூர்ணா தற்போது கர்ப்பமாகி உள்ளார். இதுகுறித்து, பூர்ணா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, "நான் அம்மா ஆவதற்கு தயாராகி விட்டேன். என் தாய் பாட்டியாகவும், தந்தை தாத்தாவாகவும் ஆகப் போகிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும். எல்லோருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். பூர்ணாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.