< Back
சினிமா செய்திகள்
அஜித்திற்கு ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்... என்ன தெரியுமா?
சினிமா செய்திகள்

அஜித்திற்கு ஷாலினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்... என்ன தெரியுமா?

தினத்தந்தி
|
1 May 2024 2:59 PM IST

அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா பக்கமும் டிரெண்டிங்கில் உள்ளது.

பிறந்த நாள் அன்று அஜித்துக்கு மிகவும் பிடித்த விஷயத்தை பரிசாக கொடுத்து ஷாலினி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அஜித்திற்கு நடிப்பதை தாண்டி பைக்கில் ரைடு போவது ரொம்பவே பிடித்த விஷயம். பைக் என்றாலே அஜித் ஒரு குழந்தை போல மாறிவிடுவார் என பல பிரபலங்கள் கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த நிலையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை கொடுத்துள்ளார்.

அஜித்திற்கு ஷாலினி கொடுத்துள்ள அந்த பைக் DUCATI MULTISTRADA V4. இந்தியாவில் இந்த பைக்கின் விலை கிட்டத்தட்ட ரூ.23 லட்சம் என கூறப்படுகிறது. அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகள்