< Back
சினிமா செய்திகள்
தனுஷ் படத்தில் இணைந்த அர்ஜுன் ரெட்டி பட நடிகை
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் இணைந்த 'அர்ஜுன் ரெட்டி' பட நடிகை

தினத்தந்தி
|
22 Sept 2024 7:06 PM IST

ஷாலினி பாண்டே தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், அசோக் செல்வன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

நித்யா மேனனைத் தொடர்ந்து ஷாலினி பாண்டேவும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதி ஆகியிருக்கிறது. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இவர் தமிழில் 100% காதல், கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'மகாராஜ்' என்ற இந்திப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவரது இணையத் தொடர்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.

மேலும் செய்திகள்