< Back
சினிமா செய்திகள்
மருத்துவமனையில் இருந்து ஷாருக்கான்  டிஸ்சார்ஜ்
சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து ஷாருக்கான் டிஸ்சார்ஜ்

தினத்தந்தி
|
23 May 2024 9:34 PM IST

அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அகமதாபாத்,

பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் திடீர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர் 1 போட்டியை ஷாருக்கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் , வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் .

இந்த நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்