< Back
சினிமா செய்திகள்
நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது ஜவான் திரைப்படம்
சினிமா செய்திகள்

நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது 'ஜவான்' திரைப்படம்

தினத்தந்தி
|
8 Nov 2023 6:13 PM IST

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீசில் கலக்கியது. 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,143.59 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கடந்த 2-ந்தேதி 'ஜவான்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் 'ஜவான்' திரைப்படம் நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் இதுவரை 1 கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்