< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஷாருக்கானின் 'டன்கி' படம் ரூ.305 கோடி வசூல்
|29 Dec 2023 8:00 AM IST
நகைச்சுவை படமாக வெளிவந்து உள்ள ‘டன்கி' ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது.
மும்பை,
நடிகர் ஷாருக்கான் நடித்த 'டன்கி' படம் கடந்த 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி படத்தை இயக்கி உள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. நகைச்சுவை படமாக வெளிவந்து உள்ள 'டன்கி' ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது.
படத்தில் நடிகை டாப்சி, நடிகர்கள் விக்கி கவுசல், போமன் ஈரானி, விக்ரம் கோச்சர், அனில் கிரோவர் உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் 'டன்கி' படம் உலக அளவில் ரூ.305 கோடியை வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக ரெட் சில்லிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.