< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் மணிரத்னம் காலை தொட்டு வணங்கிய ஷாருக்கான்!
சினிமா செய்திகள்

இயக்குனர் மணிரத்னம் காலை தொட்டு வணங்கிய ஷாருக்கான்!

தினத்தந்தி
|
29 Sept 2024 6:11 PM IST

’ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கானிற்கு சிறந்த நடிகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு `பதான்', `ஜவான்', `டங்கி' என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதில் `ஜவான்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குனர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானும் வழங்கினர்.

விருதை வழங்குவதற்காக இயக்குனர் மணிரத்னம் மேடையில் ஏறி வந்த போது, ஷாருக்கான் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார். மேலும் " எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத்திற்கும் , ஏ. ஆர். ரகுமானுக்கும் நன்றி. விருது கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால், நான் விருதுகளுக்கு பேராசைப்படுவேன். என்னுடன் இந்த பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கவுஷல், சன்னி தியோல் ஆகியோருக்கும் வாழ்த்துகள். அனைவரும் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்தான்." என்று மேடையில் அவர் பேசினார்.

மேலும் செய்திகள்