சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ஷாருக்கான்?
|ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மும்பை,
நடிகர் ஷாருக் கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
முன்னதாக அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் குவாலிபயர் 1 போட்டியை ஷாருக்கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இந்தநிலையில், நேற்று ஷாருக்கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மேல் சிகிச்சைக்காக ஷாருக்கன் அமெரிக்கா சென்று உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏன் சிகிச்சையை தொடரவில்லை?, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? மற்றும் ஏதேனும் தவறு நடந்ததா? என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.