ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' டிரைலர் குறித்த புதிய அப்டேட் வெளியீடு
|'ஜவான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
. இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Stay Tuned...#JawanTrailer pic.twitter.com/BqM0kmxHLQ
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) July 8, 2023