< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: இந்து மத வழிபாட்டு தலம் வைஷ்ணவி தேவி கோவிலில் நடிகர் ஷாருக் கான் வழிபாடு
|12 Dec 2022 1:32 PM IST
ஜம்மு-காஷ்மீரில் இந்து மத வழிபாட்டு தலமான மாத வைஷ்ணவி தேவி கோவிலில் நடிகர் ஷாருக் கான் வழிபாடு நடத்தினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் ரியாசி மாவட்டம் திரிகுடா மலையில் இந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்து மதத்தினரின் புனித தலங்களில் ஒன்றாக இக்கோவில் கருத்தபடுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவிலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேற்று இரவு வழிபாடு நடத்தினார். நேற்று இரவு 11.30 மணியளவில் ஷாருக் கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வந்தார்.
யாரும் அடையாளம் கண்டுகொள்ளாதவாறு தனது முகத்தை மறைத்து உடை அணிந்த ஷாருக் கான் தனது தனிப்பாதுகாவலர்கள் மற்றும் சில போலீசாரின் பாதுகாப்புடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். வழிபாடு நடத்திய உடன் பின்னர் அவர் புறப்பட்டு சென்றார்.