"காதல், கட்டிப்பிடி, முத்தம்...! ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி குறித்து தீபிகா படுகோனே"
|நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டனர்.
சென்னை
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.
படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை இந்த செய்தியாளர் சந்திப்பில் தீபிகா படுகோன் அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்பட்டார். அவர் அணிந்திருக்கும் கவுன் அனைவரையும் கவர்ந்தது.மேடையில் அழகுடன் தோன்றிய தீபிகா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பதான் படத்தில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி பேசபட்ட நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர்கள் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. ஷாருக்கானிற்கு தீபிகா முத்தம் கொடுத்தார்.இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டனர்.
தீபிகா படுகோனேவுடனான அவரது கெமிஸ்ட்ரி குறித்த கேள்விக்கு ஷாருக்கான் "என்னையும் தீபிகாவையும் உங்களுக்குத் தெரியும், காதல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்றவற்றுக்கு ஒரு சாக்கு வேண்டும். எனவே நீங்கள் என்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும், நான் தீபிகா படுகோனின் கையை முத்தமிடுவேன், அதுவே பதில் என கூறினார்.
ஷாருக்கான் உடனான அவரது கெமிஸ்ட்ரி பற்றி கேட்டபோது, தீபிகா, சுவாரஸ்யமாக இருந்தது, கெமிஸ்ட்ரி மிகவும் தெளிவாக இருந்தது, ஆனால் கதாபாத்திரங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. அதை சிறப்பு செய்தது எங்கள் உறவு. நாங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பும் நம்பிக்கையும். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என கூறினார்.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவின் நான்காவது படம் பதான் ஆகும். 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் தீபிகா படுகோன் அறிமுகமானார், பின்னர் அவர்கள் ஹேப்பி நியூ இயர் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்து உள்ளனர்.