< Back
சினிமா செய்திகள்
டைரக்டர் அட்லீ மீது ஷாருக்கான் கடும் கோபம்...! காரணம் இதுதான்..!
சினிமா செய்திகள்

டைரக்டர் அட்லீ மீது ஷாருக்கான் கடும் கோபம்...! காரணம் இதுதான்..!

தினத்தந்தி
|
16 Feb 2023 10:45 AM IST

அட்லீ மீது பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் கடும் கோபத்தில் உள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி, காரணம் இதுதான் என கூறப்படுகிறது.

சென்னை

அட்லீ தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனராக தன்னை நிரூபித்தார். தமிழில் இவர் இயக்கிய முதல் படமான 'ராஜா ராணி' சூப்பர் ஹிட் ஆனது. விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார்

ஷாருக்கான் 'பதான்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் 'ஜவான்'. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். நகைச்சுவை கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கின்றார்.

'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.

'பதான்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சல்மான் கானின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம் அட்லீ.நடிக்க அல்லு அர்ஜுனை படத்தின் இயக்குநர் அட்லீ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் ஒப்புதலுக்கு அட்லீ காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். அட்லீ தான் படத்திற்கு நினைத்ததை விட அதிகமாக செலவு செய்ததால் ஷாருக்கான் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அட்லீ சென்னை வந்து தனது மன வேதனையை தெரிவித்ததாக சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.ஆனால் இதுபற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்களின் படி ஜவான் வெளியீடு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும், படம் தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் 22 டிசம்பர் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக்கான் இணையும் டன்கி படத்தை இது பாதிக்கும் என கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்