< Back
சினிமா செய்திகள்
ரஜினி, விஜய்யை முந்திய ஷாருக்கான் - எதில் தெரியுமா?
சினிமா செய்திகள்

ரஜினி, விஜய்யை முந்திய ஷாருக்கான் - எதில் தெரியுமா?

தினத்தந்தி
|
19 Jun 2024 8:11 PM IST

நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது

சென்னை,

நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் முதல் 10 பேரை தற்போது காணலாம். இதில் ரஜினி, விஜய் உள்ளிட்டோரை முந்தி ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார்.

போர்ப்ஸ் மேகசின் வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி நடிகர் ஷாருக்கான் ஜவான்', 'பதான்', 'டங்கி' இந்த மூன்று படங்களின் ஹிட்டுக்குப் பிறகு தனது சம்பளத்தை ஒரு படத்திற்கு சுமார் ரூ. 150 கோடி- ரூ. 250 கோடி என நிர்ணயித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 150 கோடி - ரூ. 210 கோடி என நிர்ணயித்துள்ளார். மூன்றாவது இடத்தில் நடிகர் விஜய் உள்ளார். இவர் ரூ. 130 கோடி - ரூ. 200 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார்.

நடிகர் பிரபாஸ் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூலிப்பதாகவும், அமீர் கான் ரூ. 100 கோடி முதல் ரூ. 175 கோடி வரையும் நிர்ணயித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாவது இடத்தில் இருக்கும் நடிகர் சல்மான் கான் ரூ. 100 கோடி முதல் ரூ.150 கோடி வரையும், அடுத்த இடத்தில் உள்ள நடிகர் கமல்ஹாசன் ரூ.100 கோடி முதல் ரூ. 150 கோடி வரையும் சம்பளம் நிர்ணயித்துள்ளனர். அல்லு அர்ஜுன் ரூ. 100 கோடி- ரூ. 125 கோடி சம்பளம் வாங்குகிறார்.

கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் நடிகர் அக்சய்குமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 145 கோடியும் நடிகர் அஜித்குமார் ரூ. 105 கோடி எனவும் தங்களது சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.

மேலும் செய்திகள்