< Back
சினிமா செய்திகள்
ஷாருக்கானுடன் படத்தில் நடிக்கிறாரா சுகானா கான்? - புகைப்படம் வைரல்
சினிமா செய்திகள்

ஷாருக்கானுடன் படத்தில் நடிக்கிறாரா சுகானா கான்? - புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
18 March 2024 11:09 AM IST

சோயா அக்தர் இயக்கிய 'தி ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சுகானா கான்.

மும்பை,

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவரது மகள் சுகானா கான். சோயா அக்தர் இயக்கிய 'தி ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சுகானா கான். இந்த படம் ஓடிடி-ல் வெளியானது.

இந்நிலையில், சுஜோய் கோஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிங்' படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழலில், சாருக்கானுடன் சுகானா கானும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஷாருக்கானும் சுகானாவும் ஒரு ஜீப்பில் ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதில், ஷாருக்கான் கருப்பு நிற உடையிலும் சுகானா கான் வெள்ளை நிற உடையிலும் உள்ளனர்.

இந்த புகைப்படம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்