< Back
சினிமா செய்திகள்
தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை - விசாரணை அறிக்கை வெளியிட சமந்தா கோரிக்கை
சினிமா செய்திகள்

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை - விசாரணை அறிக்கை வெளியிட சமந்தா கோரிக்கை

தினத்தந்தி
|
31 Aug 2024 8:35 AM GMT

கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டியுள்ளார்.

சென்னை,

கேரளாவில் நடிகைகள் மீது நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் வெளியாகின. முதலில் நடிகைகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து, மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும் , தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வந்தனர்.

அதனால், நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குனர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இந்தநிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகை சமந்தா பாராட்டி இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவர் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம்.

இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக 'வாய்ஸ் ஆப் வுமன்' அமைப்பு 2019-ல் உருவாக்கப்பட்டது. கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணையின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்